நடிகை லிசா சின்னு தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். நடிகை லிசா சின்னு தமிழில், போர் தொழில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லிசா சின்னு. முன்னதாக, சினிமா பி.ஆர், மானாட மயிலாட போட்டியாளராக வலம் வந்தார். இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘‘போர் தொழிலில் படத்தில் 2 நிமிடம் தான் நான் வருகிறேன். ஆனால், படம் பார்த்தவர்கள் என்னைப் பற்றி பேசுகிறார்கள். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. படத்தைக் கொண்டாடுகிறார்கள். சினிமாவில் பி.ஆர்., தான் அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
அட்ஜஸ்ட்மெண்ட் என்னிடம் அந்த விசயம் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இங்கு அந்த மாதிரி விசயம் இருப்பதாக தெரியவில்லை. அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு; இல்லை என்று சொல்லமாட்டேன். நாம் ஒப்புக் கொண்டால் தானே எதுவும் இங்கு முடியும். நாம் முடியாது என்று சொல்லிவிட்டால், எப்படி முடியும்? சோஷியல் மீடியா இன்று உச்சத்தில் இருக்கிறது. நான் சொல்வது தவறாக கூட போகலாம்.
நீங்க ஓகே சொன்னால், ஓகே தான். இல்லை என்றால் இல்லை, அவ்வளவு தான். நீங்கள் மறுத்தால் உங்கள் வாய்ப்பு போகலாம். அதற்காக வருத்தப்படக் கூடாது. நாம் முயற்சி பண்ணிக் கொண்டே இருந்தால் வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும். பிடிக்காத ஒரு விசயத்தை செய்து விட்டு, அதன் பின் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல், பிடிக்கவில்லை என்றால் தவிர்ப்பது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.