தென்னிந்திய திரை உலகில் சிறப்பான நடிகையாக ஆரம்ப காலத்திலிருந்து வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஆரம்ப காலகட்டத்தில் ஆள் பார்ப்பதற்கு சிக்கென்று இருந்ததால் இவருக்கு ஹீரோயின் என்ற அந்தஸ்து கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி நடித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் இவரைவிட இளம் நடிகைகளுக்கு வாய்ப்புகள் அதிகம் வழங்கப்பட்டதால் ரம்யா கிருஷ்ணன் சினிமாவுலகில் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒருகட்டத்தில் சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்து கொண்டார்.
இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். 30 ஆண்டுகளாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ள இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாது. அதே போல் நடிகர் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட
பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். மேலும் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘தங்கம்’, ‘வம்சம்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது 50 வயதை கடந்த ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் மார்டன் உடையில் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர் என்று கூறலாம்.