பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் மாரிமுத்து ஜோதிடர்களை கடுமையாக விளாசியதையடுத்து, அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்நீச்சல் மாரிமுத்து பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் அரக்க குணம் கொண்ட குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் மாரிமுத்து, சமீபத்தில் பிரபல ரிவியில் நடந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான, தமிழா தமிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சீரியலைப் போன்றே இந்நிகழ்ச்சியிலும் பயங்கரமாக பேசியதுடன், உண்மை என்ன என்பதை மக்கள் சிந்திக்க வைக்குமாறு இவரது பேச்சு இருந்தது.
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வரும் பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க மாவட்ட ஓருங்கினைப்பாளர் பழ.ஆறுமுகம் என்பவர் தான் இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இதில் ஜோதிடம் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகவே இருந்து வருவதாகவும், பண்டைய காலம் இருந்து முன்னோர்கள் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இந்நிகழ்ச்சின் இடையில் மாரிமுத்து அவர்கள் ஜோதிட தொழிலை அவதூறு பரப்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும் கருத்து உரிமை உள்ளது என்பதை பயன்படுத்தி சபை நாகரிகம் மீறி ஜோதிடர்களை பார்த்து
ஒருமையில் பேசியுள்ளார் என்றும் இவை மன்னிக்க முடியாது என்றும் அதிலும் இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்வதற்கு ஜோதிடர்கள் தான் காரணம் என்று கூறியது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.மக்கள் மத்தியில் ஜோதிடர்கள் மற்றும் ஜோதிடத்தின் மேல் உள்ள நம்பிக்கை நீர்த்து போகும் அளவிற்கு அவர் பேசி உள்ளார். நாங்கள் தலைமுறை தலைமுறையாக ஜோதிடத்தை குல தொழிலாக செய்து வருகிறோம். குறித்த நோட்டீஸை பெற்ற 15 நாட்களுக்குள் மாரிமுத்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தரமான பதில்கள்….
குறிப்பா ரஜினிய வச்சி பேசினது Validஹான point….
உழைப்பில்லனா இங்க ஒரு மண்ணுமில்ல…
நாத்திகம் மக்களை தெளிவுபடுத்த அவசியமானது…
அத சரியா பேசும் போது மக்கள சிந்திக்க வைக்கும்..
That last Punch ❤❤❤❤🤣🤣🤣 pic.twitter.com/21IwXKYBq6
— பாக்டீரியா (@Bacteria_Offl) July 23, 2023