தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி புயலாக ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தையும் அடித்து சென்றவர்தான் இந்த மந்த்ரா.ராசி மந்த்ரா, தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். குஷ்புவுக்கு அடுத்தபடியான 1990 ம் ஆண்டுகளில் ‘கும்’ என, இருந்த நடிகை இவர்தான்.மந்த்ரா, தமிழ் தெலுங்கு கன்னடம் மொழி படங்களில் நடித்திருக்கிறார். மந்த்ரா, ஆந்திர பிரதேசம் மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர்.கடந்த, 1996ம் ஆண்டில், பிரிமியம் என்ற படத்தில், முதலில் மந்த்ரா அறிமுகமானார். அதன்பிறகு, தமிழில் பல படங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மந்த்ரா பிரபலமானார்.
இந்தியில் க்ராப்தர், தெலுங்கில் சுபாகன்ஷாலு ஆகிய படங்களில், மந்த்ரா அறிமுகமானார். அந்த மொழி படங்களிலும் நடித்து, ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றார். கொழுகொழு தேகத்தால் மொத்த இளைஞர்களையும் தன் பக்கம் சுண்டி இழுத்தவர்.தெலுங்கு சினிமாவை மையமாகக் கொண்டாலும் தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றவர். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக கலக்கினார். கடந்த 1997ம் ஆண்டில் வெளிவந்த வவ்டுடே படத்தில், விஜய் காதலுக்கு உதவும் தோழியாக நடித்திருப்பார்.
அடுத்து, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, ரெட்டை வயசு மனசு, கொண்டாட்டம், கல்யாண கலாட்டா, புதுக்குடித்தனம், கண்ணன் வருவான், குபேரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் அஜீத், விஜய், அருண்குமார், ஜெயராம், சத்யராஜ் படங்களில் நடித்ததால், நல்ல பாராட்டைப் பெற்றார்.தொடர்ந்து டபுள்ஸ், ராஜா, ஆளுக்கொரு ஆசை, சுயேட்சை எம்எல்ஏ படங்களை தொடர்ந்து, ஒன்பதுல குரு, சிம்பு நடித்த வாலு படம் வரை, மந்த்ரா தமிழில் தனது கலைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகள் கவர்ச்சியை காட்டினாலும் நடிக்கவும் செய்தால் மட்டுமே, ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முடியும். அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அமையும். மந்த்ராவை பொருத்தவரை அவரது கவர்ச்சியான தோற்றம் காரணமாக, அவர் நடித்த காட்சிகளில் கவர்ச்சி என்பது யதார்த்தமாக அமைந்தது. அந்த வகையில், அப்போதே ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுத்த நடிகைகளில் மந்த்ராவும் ஒருவர்.உடல் தோற்றத்தில் மட்டுமின்றி, முகத்திலும், மயக்கும் பார்வையிலும்,
ரசிகர்களை மந்திரம் போட்டது போல, மயக்குபவராக மந்த்ரா இருந்ததால், இவருக்கு என்றும் தனியாக ஒரு ரசிகர் வட்டம் உருவானது. பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் இல்லாத அன்றைய காலகட்டத்தில், சினிமா வார, மாத பத்திரிகைகள் நிறைய வெளிவந்தன. அவற்றில் பெரும்பாலான சினிமா பத்திரிகைகள், மந்த்ராவை கவர்ச்சியான படங்களை அட்டை படத்திலும், நடுப்பக்கங்களிலும் வெளியிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.இப்போதும் ரசிக்க கூடிய ‘தளதள’ என்ற அழகில் இருக்கும் மந்த்ரா அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் தாராளமாக நடிக்கலாம் என்ற வகையில் தான்,
அழகில் அசத்தலான இருக்கிறார். இப்போதும் சமூக வலைதளங்களில் அப்டேட் செய்யப்படும் மந்த்ரா புகைப்படங்களை பார்க்கும் சினிமா ரசிகர்கள், ஏக்கத்துடன் பெருமூச்சு விடவே செய்கின்றனர். அந்த காலத்துல, மந்த்ரா நடித்த படத்தை, தியேட்டரில் பார்த்துவிட்டு வந்து இரவில் படுக்கையில் படுத்தால், தூக்கமே வராது. அந்த அளவுக்கு மந்த்ரா மேல எங்களுக்கு ஒரு மயக்கம் இருந்தது என, இந்த காலத்திலும், அவருக்கு கமெண்ட் பாக்சில் தங்களது அன்பை, தெரிவித்து வருகின்றனர் மந்த்ராவின் ரசிகர்கள். தமிழில் விஜய், அஜீத் என முன்னணி நட்சத்திரங்கள்
அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார். லவ் டுடே படத்தில் விஜய்யின் தோழியாகவும், ரெட்ட ஜடை வயசு படத்தில் அஜித்துடன் நடித்தார்.அதுமட்டுமில்லாமல் ராஜா படத்தில் அஜித்துடன் இவர் போட்ட வத்தலகுண்டு பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸ். வழக்கம்போல் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.தற்சமயம் கூட அவ்வப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வாலு, ஒன்பதுல குரு போன்ற படங்களில் தலையை காட்டி விட்டு சென்ற மந்த்ரா ஆண்டி ஆகவும் இன்னொரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.